நீரின்றி அமையாது உலகு’ என்பது திருவள்ளுவர் வாக்கு. பொதுமக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம்.
தண்ணீரில் இருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றுள்ளது.
அந்தளவுக்கு தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது. தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி கடந்த 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு சபை மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Post a Comment